search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுவை இளைஞர் காங்கிரஸ் தேர்தல்"

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி புதுவை இளைஞர் காங்கிரஸ் தேர்தல் ஒரு வாரம் தள்ளிப்போகிறது. #karunanidhideath #dmk

    புதுச்சேரி:

    புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தேர்தல் வருகிற 11, 12, 13-ந்தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    புதுவை மாநில இளைஞர் காங்கிரசுக்கு தேர்தல் மூலம் இளையராஜா கடந்த 2013-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். இவரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள்.

    2016-ம் ஆண்டு இவரின் பதவிக்காலம் முடிவடைந்தது. சட்டமன்ற தேர்தல் குறுக்கிட்டதால் இளைஞர் காங்கிரஸ் தேர்தலை கட்சி தலைமை நடத்தவில்லை.

    இந்த நிலையில் 2 ஆண்டுக்கு பிறகு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தேர்தலை கட்சித்தலைமை அறிவித்தது. இதற்காக உறுப்பினர்கள் சேர்க்கை நடந்தது. இதில் 1½ லட்சம் உறுப்பினர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    மாநில, மாவட்ட, வட்டார தலைவர்களுக்கு வேட்புமனு தாக்கல் நடந்து முடிந்துள்ளது. வேட்புமனுக்கள் பரிசீலனையும் முடிக்கப்பட்டு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி காலமானார். இதனால் ஒரு வாரம் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது.

    இந்நேரத்தில் தேர்தல் நடத்துவது சரியாக இருக்காது என்பதால் தேர்தலை தள்ளிப்போட முடிவு செய்துள்ளனர். ஒருவாரம் தேர்தலை தள்ளிவைக்கப்படும் என தெரிகிறது. இதற்கான முறையான அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது. #karunanidhideath #dmk

    புதுவை மாநில இளைஞர் காங்கிரசுக்கு வருகிற 11,12-ந்தேதிகளில் தேர்தல் நடக்கிறது. இத் தேர்தலில் அமைச்சர் கந்தசாமி மகன் போட்டியிடுகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில இளைஞர் காங்கிரசுக்கு வருகிற 11,12-ந்தேதிகளில் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30-ந்தேதி தொடங்கியது. நேற்று மாலை 5 மணியோடு 4 நாட்கள் நடந்த வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட 13 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    இதில் 9 பேர் போட்டியிடுகின்றனர். ஜெயதீபன், செய்னா, காளிமுத்து, ரமேஷ், ரகுபதி, லட்சுமிகாந்தன், வேல்முருகன், கார்த்திக், அசோக்ராஜ் ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். 11 பொதுச்செயலாளர் பதவிக்கு 27 பேர் போட்டியிடுகின்றனர்.

    இதில் அமைச்சர் கந்தசாமியின் மகன் விக்னேஷ் கந்தசாமி, காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேலு மகன் அசோக்ஷிண்டே, 4 பெண்கள், 2 மாற்றுத்திறனாளிகள், 4 சிறுபான்மையினர், 6 தாழ்த்தப்பட்டோரும் அடங்கும். மாகியை சேர்ந்த ஒருவரும், காரைக் காலை சேர்ந்த 3 பேரும் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். அதிக வாக்குபெறுபவர் தலைவராக தேர்வு செய்யப்படுவார்.

    அடுத்தடுத்து வாக்குகள் பெறும் 4 பேர் துணைத்தலைவராக அறிவிக்கப்படுகின்றனர். இதுதவிர 30 தொகுதி கமிட்டிக்கும் போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் 15 பேர் கொண்ட கமிட்டி நிர்வாகிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கும் கடுமையான போட்டி நிலவுகிறது.

    இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது. வேட்பாளர்கள் பற்றிய ஆட்சேபனை இருப்பின் ரூ.ஆயிரம் பணம் செலுத்தி ஆதாரத்துடன் ஆட்சேபனையை தெரிவிக்க வேண்டும். நாளை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு சின்னம் ஒதுக்கப்படுகிறது. 14-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    ×